உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநகராட்சி கமிஷனரிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மாநகராட்சி கமிஷனரிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரை: 'மதுரை மாநகராட்சி பள்ளிகளில் தலைமையாசிரியர் காலி பணியிடங்களை கல்வித்துறை வழிகாட்டுதல்படி கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும்' என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநகராட்சி கிளை வலியுறுத்தியது. கமிஷனர் தினேஷ்குமாரிடம் ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநகராட்சி கிளைத் தலைவர் சித்ரா, செயலாளர் ஜோசப் ஜெயசீலன் ஆகியோர் அளித்த மனு: மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் ஜூலை 20 ல் நடந்த பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது. மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 8 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி அரசு விதியை பின்பற்றி கலந்தாய்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி