கோயில் கும்பாபிஷேகம்
சோழவந்தான் : தேனுாரில் அரசமர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. 100 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் நேற்று காலை கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடானது. புதிதாக பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.