உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சமூகவிரோத செயலின் கூடாரம் வகுப்பறை சொல்லும் பாடம்

சமூகவிரோத செயலின் கூடாரம் வகுப்பறை சொல்லும் பாடம்

மேலுார்: வெள்ளலுார் அரசு துவக்கப்பள்ளியின் கதவுகள் பூட்டாததால் சமூக விரோத செயல்களின் கூடாரமாக வகுப்பறைகள் மாறி வருகின்றன.பெற்றோர்கள் கூறியதாவது: பள்ளியின் முன்,பின் பக்கத்தில் கேட் இருந்தும் பூட்டுவது கிடையாது. காவலாளியும் இல்லை. அதனால் பயன்படாத வகுப்பறையை சமூக விரோத செயல்களுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர். பாதுகாப்பற்ற நிலை இருப்பதால் 3 கி.மீ., தொலைவில் உள்ள உறங்கான்பட்டி அரசு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகிறோம்.பள்ளியின் தண்ணீர் தொட்டி சிதிலமடைந்துள்ளது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து இந்த கல்வியாண்டிலாவது மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும் என்றனர்.இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் ஜெயசித்ரா, தலைமையாசிரியர் ஹெலன் ரோஸிடம் கருத்து கேட்க நாம் தொடர்பு கொண்டபோது அலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ