உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிடவேண்டும்: சாலைப் பணியாளர்கள் தீர்மானம்

நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிடவேண்டும்: சாலைப் பணியாளர்கள் தீர்மானம்

மதுரை ; 'தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்'' என, மதுரையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் சாலைப் பணியாளர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் மாநில தலைவர் மா.பால சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் பழனிசாமி, சையதுயூசுப்ஜான், மகாதேவன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட செயலாளர் மனோகரன் வரவேற்றார். பொதுச் செயலாளர் அம்சராஜ், மாநில பொருளாளர் தமிழ், அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் நீதிராஜா உட்பட பலர் பேசினர்.தமிழக அரசு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்தால், 3500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் பறிக்கப்படும் அபாயம் உள்ளதால் அம்முடிவை கைவிட வேண்டும். தமிழக அரசுக்கு கூடுதல் செலவினங்களையும், கூடுதல் நிதிச்சுமையையும் ஏற்படுத்தும் சுங்கச்சாவடி அமைப்பதற்கு பதில், அரசே நிர்வகிக்கும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். சாலைப் பணியாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அலுவலகம் சார்ந்த பணியிடங்களை குறைத்து, வருங்காலத்தில் நிரந்தர பணியாளரே இல்லாமல் செய்யும் சீரமைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணிக்காலத்தை முறைப்படுத்தி ஆணை வெளியிட வேண்டும். சாலைப் பணியாளர்களின் முதுநிலை பட்டியலை முறைப்படுத்தி வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !