உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காய் வாங்கும் முன்பே நோய் வாங்கும் அவலம்: தீர்வே கிடைக்காத மாட்டுத்தாவணி மார்க்கெட்

காய் வாங்கும் முன்பே நோய் வாங்கும் அவலம்: தீர்வே கிடைக்காத மாட்டுத்தாவணி மார்க்கெட்

மதுரை: தொடர்ந்து பெய்து வரும் மழையால் காய்கறிகள் வாங்குவதற்காக மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட் நுழையும் முன்பே நோய்கள் வாங்கும் அளவுக்கு ரோடு மோசமாக உள்ளது.2010 ல் அமைத்த ரோடுக்கு இன்று வரை மறுரோடு அமைக்கவில்லை. தினமும் 10ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வந்து செல்லும் மார்க்கெட்டில் பெயருக்கு 2 கழிப்பறைகளே உள்ளன. அதிலும் ஒன்றில் தாழ்ப்பாள் இல்லை என்கிறார் சென்ட்ரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன்.அவர் கூறியதாவது: லோடுமேன்கள் காலணி அணியாமல் தான் வேலை செய்கின்றனர். ரோடு பெயர்ந்து உள்ளிருக்கும் கான்கிரீட் கம்பிகள் அவர்களின் காலை பதம் பார்ப்பதால் காயம் ஏற்படுகிறது. ஆண்கள் அவசரத்திற்கு மறைவிடங்களை தேடிச் செல்கின்றனர். பெண்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாது. குப்பையை அள்ளி இயந்திரத்தில் இட்டு துாளாக்குகின்றனர். அவற்றை மொத்தமாக ஒரே இடத்தில் கொட்டி வைப்பதால் புழுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது.ஒருநாள் மழைக்கு மார்க்கெட் தாங்கவில்லை. மார்க்கெட் நுழைவாசலில் சாக்கடை மேன்ஹோல் நிரம்பி கழிவுநீர் வெளியேறுகிறது. மழைநீருடன் கழிவுநீரை மிதித்தபடி தான் காய்கறி, பூ வாங்க வருகின்றனர். இதனால் மக்கள் காய்களுடன் நோயையும் சேர்த்தே வாங்கிச் செல்கின்றனர். காலில் சகதியுடன் வருவோரை ேஷர் ஆட்டோ டிரைவர்களும் ஏற்ற மறுக்கின்றனர். மொத்தத்தில் நரகத்தின் வாசலாக மாட்டுத்தாவணி உள்ளது. மாநகராட்சி கமிஷனர் 2 முறை ஆய்வு செய்தும் விமோசனம் கிடைக்கவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்