உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கரைத்தால் முளைக்கும் விதை விநாயகர்

கரைத்தால் முளைக்கும் விதை விநாயகர்

மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சுழலை பாதிக்காத கரைத்தால் முளைக்கும் பசுமை விதை விநாயகர் சிலைகள் தோட்டக்கலைத் துறை சார்பில் விற்கப்படுகின்றன.விநாயகர் சிலை, பிளாஸ்டிக் தொட்டி, ஒரு கிலோ மண்புழு உரம், அரைக்கீரை விதைகள் அடங்கிய தொகுப்பு ரூ.125 க்கு சொக்கிகுளம், அண்ணாநகர் உழவர் சந்தைகளில் காலை 7:30 முதல் மதியம் 12:00 மணி வரை தோட்டக்கலைத் துறை விற்பனை மையங்களில் இன்றும் நாளையும் (செப். 6, 7) விற்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலையை வைத்து வழிபட்ட பின் நீர்நிலைகளுக்கு சென்று கரைக்க வேண்டியதில்லை என்கிறார் தோட்டக்கலைத் துணை இயக்குநர் பிரபா.அவர் கூறியதாவது: விநாயகர் செய்யும் போது நெற்றிப்பகுதியில் 2 முதல் 3 வெண்டை விதைகள் வைத்து சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சிலையை பிளாஸ்டிக் தொட்டியில் வைத்து மண்புழு உரமிட்டு தண்ணீர்விட்டால் தானாக கரைந்து களிமண்ணில் பொதிந்துள்ள விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். கூடுதல் தேவைக்கு பாக்கெட்டில் உள்ள அரைக்கீரை விதைகள் துாவி வளர்க்கலாம். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sreenivas seenu
செப் 06, 2024 21:28

நான் விதை உள்ள மண் பிள்ளையார் வாங்கினேன்...உரம் மற்றும் தொட்டி உடன் கொடுத்தனர்...நல்ல முயற்சி...இயற்கையுடன் இணைந்த இறைவழிபாடு ...தோட்டத்துறைக்கு நன்றி...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை