உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா

தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஏ.எம்.எம்.,கவுண்டர் பள்ளி வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.அவரது சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன், பொருளாளர் சிதம்பரநாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன் மாலை அணிவித்தனர். வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க, ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். காங் வட்டார தலைவர்கள் சுப்பராயலு, காந்தி தலைமையில் நகர் தலைவர் சசிகுமார் உட்பட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ