| ADDED : ஆக 14, 2024 01:00 AM
மதுரை, : பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெப்பக்குளம் குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான கபடி போட்டியை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளி நடத்தியது.ஆடவர் கபடி: 14 வயது பிரிவில் ஏ.பி.டி. துரைராஜ் பள்ளி முதலிடம், தியாகராஜர் மாடல் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 17 வயது பிரிவில் ஏ.பி.டி. துரைராஜ் பள்ளி முதலிடம், சவுராஷ்டிரா பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 19 வயது பிரிவில் தியாகராஜர் மாடல் பள்ளி முதலிடம், சவுராஷ்டிரா பள்ளி இரண்டாமிடம் பெற்றன.மகளிர் கபடி போட்டியின் 14 வயது, 17, 19 வயது பிரிவுகளில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி முதலிடம், நிர்மலா பள்ளி இரண்டாமிடம் பெற்றன. முதலிடம் பெற்ற மாணவிகளை தலைமையாசிரியை இந்துமதி, உடற்கல்வி இயக்குநர் வசந்தி, உடற்கல்வி ஆசிரியை உமா பாராட்டினர்.