தி.மு.க.,வினர் வழங்கிய பிரியாணியை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்
திருமங்கலம்: மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே வில்லூரில் நேற்று தி.மு.க.,வினர் வழங்கிய பிரியாணியை சாப்பிட்ட நூறுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், வில்லூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தி.மு.க., சார்பில் நேற்று வில்லூரில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்தபின் அனைவருக்கும் சில்வர் தட்டு, பிரியாணி பார்சல் வழங்கப்பட்டுள்ளது. பிரியாணியை சாப்பிட்ட நூறுக்கும் மேற்பட்டோர் நேற்று இரவு 8:00 மணிக்கு மேல் வாந்தி, மயக்கத்தால் அவதிப்பட்டனர்.அனைவரும் வில்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் அனைவரும் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் விருதுநகர், கள்ளிக்குடி, திருமங்கலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.