உள்ளூர் செய்திகள்

த.மா.கா., ஆலோசனை

அலங்காநல்லுார் : அலங்காநல்லுாரில் வடக்கு மாவட்ட த. மா.கா., சார்பில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். மாநில நிர்வாகி பழனிவேல், பொதுச்செயலாளர் பரத் நாச்சியப்பன் முன்னிலை வகித்தனர். மதுரை, தேனி கூட்டணி வேட்பாளர்கள் ராம சீனிவாசன், தினகரனை வெற்றிபெற செய்ய ஒருங்கிணைந்து செயல்படுவது, ஓட்டு சேகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிர்வாகிகள் கார்த்திகேயன், சடையன், பால்பாண்டி, அழகர்சாமி, முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ