உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாறுதல் கலந்தாய்வில் வெளிப்படை தன்மை: ஆசிரியர்கள் தீர்மானம்

மாறுதல் கலந்தாய்வில் வெளிப்படை தன்மை: ஆசிரியர்கள் தீர்மானம்

மதுரை: மதுரையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழுக் கூட்டம் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன், சட்ட செயலாளர் ராசேந்திரன், தலைமையாசிரியர் கழக மாவட்டத் தலைவர் சரவணமுருகன் பேசினர். மாநில துணைத் தலைவர்கள் நவநீத கிருஷ்ணன், கர்ணன், மாவட்ட செயலாளர் முரளி, பொருளாளர் தமிழ்க்குமரன், அமைப்பு செயலாளர் சோலைராஜா பங்கேற்றனர். பொது மாறுதல் கலந்தாய்வு துவங்கும் முன் நிர்வாக மாறுதலில் பணிமாறுதல் உத்தரவு வழங்குவதை ஏற்க முடியாது. வெளிப்படையாக கலந்தாய்வு நடத்த வேண்டும். மே மாதம் விடுமுறை நாட்களில் பள்ளிகளுக்கு சென்று பணியாற்றிய பி.ஜி., ஆசிரியர்கள் பணிபுரிந்த நாட்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும். இக்கல்வியாண்டில் 210 வேலை நாட்கள் என்பதே தொடர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !