உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பராமரிக்கப்படாத சுகாதார வளாகம்

பராமரிக்கப்படாத சுகாதார வளாகம்

சோழவந்தான் : சோழவந்தான் பேரூராட்சி 2வது வார்டு பேட்டை ரயில்வே கேட் பகுதியில் பராமரிக்கப்படாத வளாகத்தால் சுகாதாரம் பாதித்துள்ளது.இங்குள்ள பெண்கள் கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் 'பைப்' வழியே செல்லாமல் எதிர் திசையில் வெளியேறுகிறது. மழை நேரங்களில் 'பிளாஸ்டிக் பைப்'பைச் சுற்றி அமைத்துள்ள சிமென்ட் சுவர் நிரம்பி வெளியேறும் மனித கழிவுகள் பாசன கால்வாயில் கலந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரம் பாதித்துள்ளது. கால்வாயில் நிரம்பியுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் இருப்பிடமாக மாறியுள்ளன.பஞ்சவர்ணம் கூறுகையில், ''கழிப்பறையில் இருந்து மனித கழிவுகள் மட்டுமின்றி அசுத்தமானவை எல்லாம் வெளியேறுகின்றன. ஆண்கள் பகுதியை சிலர் கஞ்சா, மது அருந்த பயன்படுத்துகின்றனர். வீட்டுக்குள் வரும் விஷ ஜந்துக்களை கட்டுப்படுத்த 3 பூனைகள், 2 நாய்களை வளர்க்கிறேன். சுகாதார வளாகத்தை பராமரிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ