உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

திருமங்கலம்: சவுடார்பட்டி ஊராட்சி எஸ்.பொட்டிபுரத்தில் ஒரு மாதமாக வைகை கூட்டு குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை. கிராம மக்கள் மூன்றரை கி.மீ., சென்று தண்ணீர் பிடிக்கின்றனர். 2 மாதமாகதெரு விளக்கு எரியவில்லை. கழிவுநீர் கால்வாய் துார்வாரப்படவில்லை. இதை கண்டித்து பெண்கள் நேற்று காலை திருமங்கலம் ஒன்றியஅலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் மதியம் 12:00 மணி வரை வராததால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலர்கள், போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி