உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு மருத்துவமனைகளில் டீன்கள் நியமனத்தை கண்காணிப்போம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் டீன்கள் நியமனத்தை கண்காணிப்போம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டீன் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்நீதிமன்றம் கண்காணிக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மதுரை வெரோணிக்கா மேரி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, திருச்சி, புதுக்கோட்டை, கரூர் அரசு மருத்துவமனைகளில் டீன் பணியிடங்கள் காலியாக உள்ளன. மருத்துவக் கல்லுாரிகளின் சில மூத்த பேராசிரியர்கள் டீன் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர்.அனுபவம், தகுதி, திறமையானவர்களை முழுநேர பணியில் டீன்களாக நியமிக்கக்கோரி தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பு: தற்போது 13 அரசு மருத்துவமனைகளில் டீன் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2024-25 ல் 26 காலி பணியிடங்கள் ஏற்படும். தகுதியானவர்களை தேர்வு செய்ய பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பித்த 550 பேர் இடம்பெற்றுள்ளனர். அனுபவம், கல்வித் தகுதி, பணிமூப்பு அடிப்படையில் பரிசீலித்து டீன் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்நீதிமன்றம் கண்காணிக்கும் வகையில் விசாரணை அக். 14க்கு ஒத்திவைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை