மேலும் செய்திகள்
மாணவன் பலி
3 hour(s) ago
கொட்டாம்பட்டியில் பஸ் மறியல்
3 hour(s) ago
சிலம்பு போட்டியில் மாணவர்கள் சாதனை
3 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி /டிச.31 க்குரியது
3 hour(s) ago
கண்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து பலி
3 hour(s) ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர், நெல்லையப்பபுரம் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்தந்த பகுதி கண்மாய்கள், குளங்களில் சங்கமித்து சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. பாதாள சாக்கடை திட்டம் மூலமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்பதால் மதுரை மாநகராட்சிதான் மனது வைக்க வேண்டும்.வைகை அணை தண்ணீர் மூலம் திருப்பரங்குன்றம் தென்கால், நிலையூர் பெரிய கண்மாய், பானாங்குளம், செவ்வந்தி குளம், சேமட்டான்குளம், ஆரியங்குளம் கண்மாய்கள் நிரம்பும். திருப்பரங்குன்றத்தின் ஒரு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தென்கால் கண்மாயிலும், தென்பரங்குன்றம் பகுதி கழிவுநீர் பாணாங்குளத்திலும், நெல்லையப்பபுரம், சுந்தர் நகர் கழிவு நீர் சேமட்டான் குளத்திலும், பாம்பன் நகர் கழிவுநீர் குறுக்கட்டானிலும், திருநகரின் ஒரு பகுதி கழிவுநீர் புளியங்குளம் கண்மாயிலும், எஸ்.ஆர்.வி. நகர் பகுதி கழிவுநீர் நிலையூர் பெரிய கண்மாயிலும் விளாச்சேரி, பாலசுப்பிரமணிய நகர், தேவிநகர், சந்திராபாளையம் பகுதி கழிவுநீர் நிலையூர் கால்வாயிலும் கலக்கிறது.சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நிலத்தடி நீர் மாசடைகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரப்புகின்றன. துர்நாற்றமும் வீசுகிறது.திருப்பரங்குன்றம் கழிவு நீரை வெள்ளக்கல் கழிவு நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்ல திருப்பரங்குன்றம் நகராட்சியாக இருந்த போது பாதாளச் சாக்கடைத் திட்டம் அமைக்க முடிவானது. இதற்காக ஆய்வுப் பணிகளும், மண் பரிசோதனையும் நடந்தது.மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குபின்பு கடந்த ஆண்டு மீண்டும் ஆய்வுப் பணிகள் நடந்தது. அதன் பின்பு பாதாளச்சாக்கடைத் திட்டம் தொடங்க எந்த அறிகுறியும் இல்லை. திருப்பரங்குன்றம் விரிவாக்க பகுதி அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதனால் கழிவுநீர் வரத்தும் கண்மாய்களை ஆக்கிரமிக்கிறது.பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி சுகாதார சீர்கேட்டிலிருந்து திருப்பரங்குன்றம் மக்களையும், நீர் நிலைகளையும் காப்பாற்ற நடவடிக்கை தேவை.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago