| ADDED : ஆக 09, 2024 01:07 AM
மதுரை: திருமங்கலம் குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான கேரம் போட்டிகளை திருமங்கலம் பி.கே.என். மெட்ரிக் பள்ளி நடத்தியது. மகளிர் போட்டி முடிவுகள்
14 வயது ஒற்றையர் பிரிவில் சிவரக்கோட்டை அரசுப் பள்ளி முதலிடம், திருமங்கலம் மெட்ரிக் பள்ளி 2ம் இடம் பெற்றன.இரட்டையர் பிரிவில் சிவரக்கோட்டை அரசுப் பள்ளி முதலிடம், கூடக்கோவில் கே.என். பள்ளி 2ம் இடம் பெற்றன. 17 வயது ஒற்றையர், இரட்டையர்பிரிவுகளில் சிவரக்கோட்டை அரசுப் பள்ளி முதலிடம், கப்பலுார் டி.எம். பள்ளி 2ம் இடம் பெற்றன. 19 வயது ஒற்றையர் பிரிவில் திருமங்கலம் மெப்கோ ஸ்லெங்க் பள்ளி முதலிடம், கப்பலுார் அரசுபள்ளி 2ம் இடம் பெற்றன. இரட்டையர் பிரிவில் செக்கானுாரணி அரசுப் பள்ளி முதலிடம், கெரன் பள்ளி 2ம் இடம் பெற்றன. ஆடவர் போட்டி
14 வயது ஒற்றையர் பிரிவில் பி.கே.என். மெட்ரிக் பள்ளி முதலிடம், சிவரக்கோட்டை அரசுப் பள்ளி 2ம் இடம்பெற்றன.இரட்டையர் பிரிவில் பி.கே.என். பள்ளி முதலிடம், பி.கே.என். மெட்ரிக் பள்ளி 2ம் இடம் பெற்றன. 17 வயது ஒற்றையர் பிரிவில் பி.கே.என். மெட்ரிக் பள்ளி முதலிடம், வில்லுார் அரசுப் பள்ளி 2ம் இடம் பெற்றன. இரட்டையர் பிரிவில் கெரன் பள்ளி முதலிடம்,கள்ளிக்குடி அரசுப் பள்ளி 2ம் இடம் பெற்றன. 19 வயது ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் பி.கே.என். பள்ளி முதலிடம், பி.கே.என். மெட்ரிக் பள்ளி 2ம் இடம் பெற்றன.