இ.கம்யூ.,வினர் 22 பேர் கைது
திருமங்கலம்; திருமங்கலம் ஆலம்பட்டி ஊராட்சி டி.ஆண்டிபட்டியில் ஆதிதிராவிடர்களுக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புக்காக இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்திற்கு செல்ல இதுவரை பாதை இல்லை. பொதுப்பாதை அமைக்கக் கோரி பலமுறை வருவாய் துறையினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் உடனே பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூ., கட்சியினர் நேற்று தாலுகா அலுவலகம் முன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்திற்கு முயன்றனர். அவர்களில் 22 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.