உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறுவன் காலில் விழ வைத்ததாக வன்கொடுமை வழக்கு பதிவு

சிறுவன் காலில் விழ வைத்ததாக வன்கொடுமை வழக்கு பதிவு

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, சங்கம்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கிராம கோவிலில் நடந்த புரட்டாசி திருவிழாவில் சிறுவர்களுடன் நடனமாடினார். அங்கிருந்தவர்கள் அவரை திட்டியதுடன், 'வேட்டியை மடித்துக்கட்டாதே' எனக்கூறி தாக்கியதால் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.இதுகுறித்து, மதுரையில் பணிபுரியும் தன் தந்தையிடம் கூறுவதற்காக கிராமத்தை விட்டு, அச்சிறுவன் புறப்பட்டார். சில நாட்களுக்கு பின் ஊருக்கு திரும்பியபோது, அவரை, கிஷோர், உக்கிரபாண்டியன், மணிமுத்து, பிரம்மா, சந்தோஷ், நித்திஷ் ஆகியோர் கடத்திச் சென்று தாக்கி உள்ளனர்.அப்போது அங்குள்ள கோவிலில் முட்டி போட வைத்து, அடித்து மிரட்டி, 6 வயது சிறுவன் உட்பட அனைவரது கால்களிலும் விழ வைத்ததாகவும், தனக்கு பாதுகாப்பு வேண்டியும் உசிலம்பட்டி டவுன் போலீசில் சிறுவன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கிேஷார் உள்ளிட்ட ஆறு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை