உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

சேதமடைந்த ரோடுமதுரை அவனியாபுரம் பைபாஸ் ரோடு மல்லிகை குடியிருப்பு செல்லும் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. இதில் பலர் விபத்தில் சிக்குகிறார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டும். - - தாழைக்கனி, அவனியாபுரம்.ரோட்டில் கழிவு நீர்மதுரை புதுநத்தம் ரோட்டில் ராமகிருஷ்ண மடம் அருகே கழிவு நீர் செல்கிறது. இதில் வாகனங்கள் செல்லாமல் எதிர் வரும் திசையில் செல்வதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -- கார்மேகம், கலைநகர்.கோயில் வீதிகளில் அசுத்தம்மதுரை கீழமாசிவீதியில் சுவாமி சுற்றி வரும் பாதையில் அசுத்தம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கழிப்பிட வசதிகள் வேண்டும் என பலமுறை கேட்டும் பயனில்லை. மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- வீரபுத்திரன், அண்ணாநகர்.பெரியபள்ளங்களால் விபத்துமதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் பெரிய பள்ளங்கள் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -கிருஷ்ணமூர்த்தி, பழங்காநத்தம்.தெருவிளக்கு எரியவில்லைமதுரை திருநகர் தணிகை நகரில் தெருக்கள் முழுவதும் விளக்குகள் எரியவில்லை. பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தெருநாய்கள் தொல்லை நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஞானசேகரன், திருநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி