உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

* கால்வாய் குப்பையை அகற்ற வேண்டும்மதுரை மாநகராட்சி 22 வது வார்டு செங்கோல் நகர் கால்வாய்யில் பல மாதங்களாக குப்பை, புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் பாம்பு வசிப்பிடமாக உள்ளது. குப்பையை அகற்ற வேண்டும்.- வாசுகி மேரி, செங்கோல் நகர்.*அறிவிப்பு பலகை மாற்றவேண்டும்மதுரை மாநகராட்சி 44 வது வார்டு புதுராமநாதபுரம் ரோட்டில் உள்ள மாநகராட்சி அறிவிப்பு பலகையில்மீனாட்சி நகர் என்பதற்கு பதிலாக மீனாட்சி தெரு என்று உள்ளது. உடனே சரி செய்ய வேண்டும்.- வேலுச்சாமி, புதுராமநாதபுரம் ரோடு.* வாய்க்காலில் கழிவுநீர்திருமங்கலம் நகரில் காமாட்சி அம்மன் கோயில் தெரு முழுவதும் பாதாள சாக்கடை நிறைந்து வாய்காலில் ஓடுகிறது. இதனால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.- கே. ராஜா, திருமங்கலம்.*கொசுக்களால் தொல்லைமதுரை பழைய குயவர்பாளையம் ரோடு காசிமல்லி தோப்பு தெருவில் வாய்க்கால் முழுவதும் சாக்கடை ஓடுகிறது. குப்பை முறையாக அள்ளப்படுவது இல்லை, கொசுகள் உற்பத்தியாகின்றன.- இந்துமதி, பழைய குயவர்பாளையம் ரோடு.* அகல பாதை வேண்டும்மதுரை ஒபுளா படித்துறை முதல் ஏ.வி பாலம் வரையிலான வைகை தென்கரை ரோட்டில் பாதை சிறியதாக உள்ளதால் பெரிய வாகனங்கள் வரும்போது டூவீலரில் செல்ல முடியவில்லை. அகலப்பாதையாக மாற்ற வேண்டும்.- தங்கம் செந்தில்குமார், மதிச்சியம்.* ரோடு ஆக்கிரமிப்புமதுரை பெத்தானியபுரம் பாலம் முதல் ரிங்ரோடு வரையிலான வைகை தென்கரை, வடகரை ரோடுகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கணேஷ், தத்தனேரி.* நுாலகத்தில் மின்சாரம் இல்லைமேலவளவு நுாலகத்தில் ஓராண்டாக மின்சாரம் இல்லை. நுாலகத்தில் கழிப்பறை வசதி இல்லை. தேர்வு நெருங்கும் நேரம் மாணவர்கள் மிகவும் சிரம்மப்படுகிறார்கள்.- செல்வம், மேலவளவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை