உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு மருத்துவமனை கட்டடத்தில் வேலை செய்தவர் கீழே விழுந்து பலி

அரசு மருத்துவமனை கட்டடத்தில் வேலை செய்தவர் கீழே விழுந்து பலி

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை தீவிர விபத்து பிரிவு கட்டட முதல்மாடி ஜன்னலை சுத்தம் செய்த மதுரை நரிமேட்டைச் சேர்ந்த தினக்கூலி பணியாளர் விஜயகுமார் 48, தகர கூரை உடைந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று இறந்தார்.மருத்துவமனை கட்டட பராமரிப்பு பணிகளை வேலையின் தன்மைக்கேற்ப ஒப்பந்ததாரர்கள் மூலம் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. இறந்த விஜயகுமார் ஒப்பந்ததாரரிடம் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்துள்ளார். செப். 21 மாலை 4:00 மணிக்கு தீவிர விபத்து பிரிவில் சாரம் கட்டி பிளாஸ்டிக் கூரையின் மேல் நின்று முதல் தளத்தில் சேதமடைந்த ஜன்னல்களை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது பிளாஸ்டிக் கூரை பெயர்ந்து கீழே விழுந்ததில் தலைக்காயம் ஏற்பட்டு அதே வளாகத்தில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் அரசு மருத்துவமனை தீவிர சுவாசபிரிவில் (ஐ.ஆர்.சி.யு.) அனுமதிக்கப்பட்டு நேற்று இறந்தார். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை