உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழகத்தில் விதவைகள் அதிகரிக்க மதுவே காரணம்: கைம்பெண்கள் வாழ்வு ஆய்வறிக்கையில் தகவல்

தமிழகத்தில் விதவைகள் அதிகரிக்க மதுவே காரணம்: கைம்பெண்கள் வாழ்வு ஆய்வறிக்கையில் தகவல்

மதுரை : 'தமிழகத்தில் விதவைகள் அதிகரிக்க மதுவே காரணம்' என, கைம்பெண்கள் வாழ்வு நிலை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரையில் தமிழ்நாடு கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கம், லாஸ் சட்ட மையம் வாழ்வு நிலை சார்பில் கைம்பெண்கள் வாழ்வுநிலை ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக மூத்த ஆய்வாளர் ராஜகுமாரி, ஆதரவற்ற பெண்கள் நலச்சங்க தலைவர் அன்புச்செல்வி, துணைச் செயலாளர் சுதா, விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்க நிர்வாகி கஸ்துாரி உட்பட பலர் பங்கேற்றனர்.ராஜகுமாரி கூறியதாவது: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி தமிழகத்தில் 38 லட்சம் பெண்கள் விதவைகளாக இருந்தனர். இதன்படி பெண்களில் 10.7 சதவிதம் பேர் விதவைகள். இவர்கள் கணவரை இழக்க பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கிய காரணம் மதுபோதை.38 சதவீத பெண்கள் கணவரை இழக்க காரணம் மதுபோதை. 34 சதவீத பெண்களின் கணவர் நோயால் பாதித்து இறந்துள்ளனர். அந்த நோய்க்கும் மதுபோதை முக்கிய காரணமாக உள்ளது. 21 முதல் 35 வயதுக்குள் 57 சதவீத பெண்கள் விதவையாகி உள்ளனர். 16 மாவட்டங்களில் நடந்த இந்த ஆய்வில் 495 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.தமிழகத்தில் பல பெண்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக, கலாசார வழக்கப்படியும் பின் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது. நிரந்தர வேலையின்மை, கடன் சுமை, கலாசார பாகுபாடு அவர்களின் மாண்பை கலைத்து மேலும் பின்னுக்கு தள்ளுகிறது.தமிழக அரசு விதவை பெண்களுக்கு வாரியம் துவங்கியதை வரவேற்கிறோம். அவர்களை பாதுகாக்கவும், பொருளாதார வகையில் உதவவும் தனிச்சட்டம் வேண்டும். பெண்கள் விதவைகளாக மாற காரணமான மதுவை தடை செய்ய வேண்டும். அரசு பணியில் 10 சதவீத கைம்பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றார். கலங்கரை மைய இயக்குநர் குழந்தைசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

konanki
ஜூன் 25, 2024 00:03

தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகம். 38,% சதவீதம் இதற்கு காரணம் மதுவினால் ஏற்படும் மரணங்கள் என்று ஆய்வு சொல்கிறது. இதுவாவது முதல்வருக்கும் , திமுக சொம்பு ஆகிய உனக்கும் தெரியுமா? இல்லை இதுவும் தெரியாது என்று முரட்டு முட்டா??


konanki
ஜூன் 25, 2024 00:03

தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகம். 38,% சதவீதம் இதற்கு காரணம் மதுவினால் ஏற்படும் மரணங்கள் என்று ஆய்வு சொல்கிறது. இதுவாவது முதல்வருக்கும் , திமுக சொம்பு ஆகிய உனக்கும் தெரியுமா? இல்லை இதுவும் தெரியாது என்று முரட்டு முட்டா??


konanki
ஜூன் 25, 2024 00:03

தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகம். 38,% சதவீதம் இதற்கு காரணம் மதுவினால் ஏற்படும் மரணங்கள் என்று ஆய்வு சொல்கிறது. இதுவாவது முதல்வருக்கும், திமுக சொம்பு ஆகிய உனக்கும் தெரியுமா? இல்லை இதுவும் தெரியாது என்று முரட்டு முட்டா??


konanki
ஜூன் 24, 2024 23:48

"ஸ்டாலின் தான் வர்றாரு 83% புது விடியல் தராரு" இந்த வாக்குறுதியுடன் திமுக 2026 சட்ட மன்ற தேர்தலை சந்தித்தால் திமுக கூட்டணிக்கு 196 சீட்டு குடுத்து தமிழக மக்கள் மறுபடியும் ஆட்சியில் அமர்த்துவார்கள். கல் தோன்றா மண் தோன்றா முன் தோன்றி மூத்த தமிழ் "குடி"


konanki
ஜூன் 24, 2024 23:35

திமுக வின் வீட்டிற்கு ஓரு விதவை திட்டத்தில் சேர்ந்து வெற்றி பெற்ற பயனாளிகள் 38%சதவீதம் தானா?? ஐயகோ திராவிடியாகளுக்கு ஏன் இந்த சிறுமை? 38 சதவீதத்தை 83 சதவீதமாக மாற்றி புது விடியல் காண்பதே திமுக வின் இலக்கு


M Ramachandran
ஜூன் 24, 2024 19:46

இந்த அறிக்கையின் நகலை மமதை மம்தா தா அம்மா விற்கும் சோனி அம்மாளுக்கும் அனுப்ப வேண்டும்.


M Ramachandran
ஜூன் 24, 2024 19:20

மதுவினால் செத்த வர்களுக்கு 10 லட்சமாம் பட்டாசு தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்யும் ஆட்க்களுக்கு தீ விபத்தில் இறந்தால் 3 லட்சம் தான். இப்போ அவர்கள் அவர்கள் கம்பனி நாட்டு அரைக்கால் செத்தால் மட்டும் 10 லட்சம் வாயை மூட. அதனால் விதவைக்கலி ஆனவர்களுக்கு அதுக்கும் இந்த விடியா அரசு மறு கல்யாணம் செய்து வைய்கிரேன் என்று புறப்பட்டுவிடும்.


R KUMAR
ஜூன் 24, 2024 13:29

என்னமோ புதுசா கண்டுபிடித்து எழுதி உள்ளனர். இதை ஏற்கனவே எங்கள் தலைவி கனிமொழி அக்கா அவர்கள், கண்டுபிடித்துவிட்டார். அவர்கள் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், முதல் கையழுத்து டாஸ்மாக் கடைகள் மூடப்படும், தி.மு.க - காரர்கள் நடத்தும் சாராய ஆலைகள் மூடப்படும் என்றும் தேர்தல் சமயத்தில் தி.மு.க ஆட்சி அமைக்காது என்று எண்ணியோ என்னவோ உறுதி மொழி வேறு கொடுத்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த உறுதி மொழி நிறைவேற்றப்படும் என்றே கடந்த இரண்டரை ஆண்டுகளாக காத்துக்கொண்டு உள்ளனர்.


Vijay
ஜூன் 24, 2024 11:19

எங்கே பிராய்ட் ?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 10:16

எங்கே அந்த திகார் திரும்பாத, ட்டூட்டுக்குடி போராளி ராணி ????


மேலும் செய்திகள்