அல்லிகுண்டம் சப்பர ஊர்வலம்
உசிலம்பட்டி: அல்லிகுண்டம் முத்தாலம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா சப்பர ஊர்வலம் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த ஆண்டு ஏப்.6ல், கரியமால் அழகர் நகர்வலத்துடன் துவங்கியது. தொடர்ந்து 31 அடி உயரமுள்ள சப்பரம், முத்தாலம்மன் சிலையெடுப்பு நிகழ்ச்சி நடந்தது. மாவிளக்கு, முளைப்பாரி, பொங்கல், தீச்சட்டி, கிடா வெட்டு வழிபாடு நடந்தது. நேற்று மாலை யானை முன் செல்ல, மழையில் நனைந்தபடி சப்பர ஊர்வலம் துவங்கியது. பக்தர்கள் நேர்த்திக் கடனாக தவழும் பிள்ளை, கை, கால், பாதம் உருவத்தில் செய்யப்பட்ட சுதை பொம்மைகளும், மாறுவேடங்கள் அணிந்தும் வந்தனர். ஊர்வலமாக சென்று அருகிலுள்ள மலையடிவாரத்தில் முத்தாலம்மன் சிலை கரைப்பு நிகழ்ச்சி நடந்தது.