உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இதையும் கொஞ்சம் பாருங்க: ராயகோபுரம் அழகை மறைக்கும் ஆக்கிரமிப்புகள்: புதுமண்டபத்தோடு சுற்றுலா இடமாக மாற்ற வேண்டும்

இதையும் கொஞ்சம் பாருங்க: ராயகோபுரம் அழகை மறைக்கும் ஆக்கிரமிப்புகள்: புதுமண்டபத்தோடு சுற்றுலா இடமாக மாற்ற வேண்டும்

மதுரை: மதுரையில் நந்தி சிலை, புதுமண்டபம் எதிரிலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க ராயகோபுரம் ஆக்கிரமிப்புகளால் கவனிப்பாரற்று கிடக்கிறது.400 ஆண்டுகளுக்கு முன் நாயக்கர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ராயகோபுரம் முழுமை பெறாமல் துாண், சுவர்களுடன் நின்றுவிட்டது. காலப்போக்கில் முழுமை பெறாத கோபுரமே கலையழகு தந்தது. ஆரம்ப காலத்தில் தெருவோர வியாபாரிகள் இதன் முன்பாக தினமும் வந்து பொருட்களை விற்ற காலம் மாறி தற்போது நிரந்தரமாக ராயகோபுரத்தை ஆக்கிரமித்து விட்டனர். தரையில் இருந்து ஆறடி உயரம் வரை ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்களால் மறைக்கப்பட்டுள்ளது.கோபுரத்தின் மேல்பகுதியில் நீலநிற தார்ப்பாலின் சீட் பரப்பப்பட்டு அதன் அழகை மறைக்கிறது. தற்போது மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி வரும் வெளிநாட்டு, வெளிமாநில பயணிகள் ஆக்கிரமிப்புகளை தாண்டி ராயகோபுரத்தின் மேற்புற துாண்களின் அழகை அண்ணாந்து பார்த்து ரசித்துச் செல்கின்றனர்.தற்போது புதுமண்டபத்தில் தனியார் நன்கொடையுடன் சீரமைப்பு வேலை நடக்கிறது. இந்நிலையில் ராயகோபுரம் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற மாநகராட்சியும், அறநிலையத்துறையும் முன்வரவேண்டும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ராயகோபுரத்தைச் சுற்றிலும் மின்விளக்குகள் ஒளிரச் செய்து கோபுரத்தின் வரலாற்று குறிப்புகளை அறிவிப்பாக வைக்க வேண்டும். புதுமண்டபத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ராயகோபுரத்தின் அழகையும் பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜன 04, 2024 06:38

அந்த அந்த ஏரியா கவுன்சிலருக்கும், அல்லது கவுன்சிலரின் மனைவிக்கும், அல்லது கவுன்சிலரின் கணவனுக்கும், மற்றும் பல உறவுகளுக்கும் கிடைக்கவேண்டியது கிடைத்தால், ராய கோபுரம் என்ன, மதுரை மீனாட்சி அம்மனையே மறைக்கும் அளவுக்கு ஆக்கிரமிப்புக்களை அனுமதிப்பார்கள் நான் மேலே சொன்னவர்கள். அந்த ஆக்கிரமிப்பு வணிகர்களிடமிருந்து அவர்களுக்கு தினம் தினம் ஒரு குறிப்பிட்ட தொகை வேறு எஸ்ட்ராவா கிடைக்கும்.


அப்புசாமி
ஜன 03, 2024 07:55

மதுரையிலிருந்து ஒரு 5 லட்சம்.பேரை ஊரு கடத்துங்க. சரியாயிடும். ராய கோபுரம்.கட்டுனபோது மக்கள் தொகை சில ஆயிரம்தான் இருக்கும். இப்போ எய்ம்ஸ் எல்லாம் வந்தாச்சு.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை