ஆனி திருமஞ்சனம்
மதுரை; மதுரை அனுப்பானடி தில்லையம்பல நடராஜர் சிவகாமி அம்மன் கோயிலில் ஆனி திருமஞ்சனம் நடந்தது. அபிஷேகம், ஆராதனை, அம்மனுக்கு மங்கல நாண் பூட்டும் வைபவம் நடந்தது. பூஜைகளை பூசாரி சடகோபன் செய்தார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ராஜமாணிக்கம் செய்திருந்தார்.