துணை தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
மதுரை: மதுரையில் பிளஸி அக்ரோ லிட்., நிறுவனம் ஒன்றின் நிதி மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்தனர். நிறுவன உரிமையாளர், தன் இரு சொத்துக்களை இளங்கோ, பழனியப்பன் என்ப-வர்களுக்கு விற்றுள்ளார். இதையறிந்த முதலீட்டாளர்கள், 'மோசடி பணத்தில் வாங்கிய சொத்துக்களை இருவருக்கும் விற்றது தவறு. அச்சொத்துகளை ஏலம் விட்டு எங்கள் முதலீட்டு தொகையை திருப்பி ஒப்படைக்க வேண்டும்' என, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.ஏலம் விட டி.ஆர்.ஓ.,வுக்கு கோர்ட் அறிவுறுத்தியது. அப்போது, டி.ஆர்.ஓ., அலுவலக தலைமை அலுவல-ராக இருந்த தனபாண்டி, தற்போது தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக உள்ளார். இவர் ஏலம் விடாமல் கிடப்பில் போட, 1.65 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அனுப்பப்பட்-டது. முதற்கட்ட விசாரணையில் லஞ்சம் பெற்றதற்கான முகாந்திரம் இருப்பதை அறிந்து, தனபாண்டி மீது வழக்-குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று காலை மாட்டுத்தாவணி பொன்மேனி கார்டனில் உள்ள தனபாண்டி வீட்டில் டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பிரபு, பாரதிப்ரியா உள்ளிட்டோர் சோதனை செய்து சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.