நிர்வாகிகள் நியமனம்
திருமங்கலம்: அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் நியமனம் திருமங்கலம் தனியார் மகாலில் மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில் ராமகிருஷ்ணன் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் பொருளாளராகவும் துாத்துக்குடி துரை மாநில அவை தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டனர். மேலும் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் துணைச் செயலாளர்கள், இளைஞர் அணி செயலாளர்கள், அவை தலைவர்கள், குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டனர்.