உள்ளூர் செய்திகள்

பாராட்டு விழா

மதுரை: மதுரை இளமனுார் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில், தமிழ் இலக்கியத் திறனறிவுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவி தேவஸ்ரீக்கு பாராட்டு விழா மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. தாசில்தார் உதயசங்கர் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை கனகலட்சுமி வரவேற்றார். நலத்துறை திட்ட ஆலோசகர் ராஜா ஜெகஜீவன் பரிசு வழங்கி பேசினார். பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. தமிழாசிரியர் மகேந்திர பாபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ