உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வரப்பு கட்டும் பணி தாமதத்திற்கு அதிகாரிகள்தான் காரணமா? அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகார்

வரப்பு கட்டும் பணி தாமதத்திற்கு அதிகாரிகள்தான் காரணமா? அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகார்

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி, பால்குடியில் வரப்பு கட்டும் பணியை ஒன்றிய அதிகாரிகள் முடித்து கொடுக்காமல் விவசாயிகளை அலைக்கழிப்பதாக, மேற்பார்வையாளர் (ஓவர்சீயர்) மீது புகார் எழுந்துள்ளது.தென்னை பயிரிட விரும்பும் விவசாயிகள் தங்கள் இடத்திற்குரிய ஆவணங்களை ஒன்றிய அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அவற்றை ஓவர்சியர் பரிசீலனை செய்து, ஆவணங்கள் சரியாக இருந்தால் இடத்தை நேரில் ஆய்வு செய்வார். அதன்பின் இடத்தின் அளவை பொறுத்து செயற்பொறியாளருக்கு பரிந்துரை செய்வர்.அதன் பிறகு தேசிய ஊரகப் பணியாளர்கள் மூலம், தென்னை பயிரிட வரப்பு கட்டி கொடுக்கப்படும். வேலைகள் முடிவடைவதை ஜியோ டெக் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே அடுத்த கட்ட வேலைக்கு ஏற்பாடு செய்யப்படும். ஆனால் கச்சிராயன்பட்டி ஊராட்சி பால்குடி பகுதியில் முடிவடைந்த வேலைகளை ஓவர்சியர் பதிவேற்றம் செய்யாததால் விவசாய பணிகள் பாதிக்கிறது.விவசாயி மாரிமுத்து கூறியதாவது: வரப்பு கட்டி முடிக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கிறோம். இது குறித்து ஓவர்சியர், பி.டி. ஓ., விடம் கூறியும் சரி செய்யவில்லை. ஒன்றிய அலுவலகத்திற்கு 40 நாட்களாக அலைக்கழிக்கப்படுகிறோம். வரப்பு கட்டும் பணியை உடனே முடித்து தர வேண்டும், என்றார்.ஒவர்சீயர் காளை கூறுகையில், வயலுக்கு சென்று படம் எடுத்து ஜியோ டெக் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் போது பொருந்தவில்லை. அதனால் மற்றொருவர் அலைபேசியில் படம் எடுத்துள்ளேன். விரைவில் வரப்பு கட்டும் பணிகள் துவங்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ