உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.60 வழிப்பறிக்காக 27 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ரூ.60 வழிப்பறிக்காக 27 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மதுரை : மதுரையில் ரூ.60 வழிப்பறி வழக்கில் 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கைது செய்யப்பட்டார்.மதுரை அண்ணாநகர் ஜக்காதோப்பைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 55. இவர் 1997ல் ரூ.60 வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலைமறைவானார். இவர் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. வழக்குகளில் தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. உதவிகமிஷனர் சூரக்குமார் தலைமையில் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் சந்தானபாண்டியன், பன்னீர்செல்வம் ஆகியோர் பழைய வழக்குகளை ஆய்வு செய்தனர்.ஜக்காதோப்புக்கு சென்று பன்னீர்செல்வம் குறித்து விசாரித்தபோது சிவகாசி பகுதியில் குடும்பத்துடன் வசிப்பது தெரிந்தது. அங்கு உள்ளூர் போலீசார் மற்றும் தெப்பக்குளம் போலீசாருடன் சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆய்வு செய்வதாக கூறி பன்னீர்செல்வம் குடும்பத்தினரிடம் பெயர், விபரங்களை கேட்டு உறுதிசெய்தனர். இதைதொடர்ந்து அங்குள்ள ஒயின் ஷாப் ஒன்றில் வேலை செய்த பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த போலீசாரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
நவ 10, 2024 22:30

கவலப்படாதே ராசா... 2047 க்குள்ளாற விசாரிச்சு தீர்ப்பளிச்சுருவாங்க.


முருக‌ன்
நவ 10, 2024 11:43

60 ருபாய் என்றாலும் வழிப்பறி வழிப்பறி தான். 27 வருடத்திற்கு பின்னும் கடமை உணர்ச்சியுடன் சிறப்புடன் பணியாற்றிய இவர்களை அங்கிகரிக்கும் விதமாக பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையா, நீரவ் மோடி, இன்னும் பலரை கண்டு பிடித்து கொண்டு வர சிறப்பு தனிப்படை அமைக்கலாமே.


Va.sri.nrusimaan Srinivasan
நவ 10, 2024 08:48

appudiye, vengaivayal kutravaaligalai pudikka mudiyumannu paarungo!!


Mani . V
நவ 10, 2024 08:38

"........ரூ.60 வழிப்பறி வழக்கில் 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கைது செய்யப்பட்டார்.....". ஆனால், கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வைத்துள்ள இன்னாள் முன்னாள் மந்திரிகள் மீது ஒரு எழவு நடவடிக்கையும் எடுக்கவே முடியாது.


DUBAI- Kovai Kalyana Raman
நவ 10, 2024 08:33

வெட்டி செலவு ..லேட்டஸ்ட் குற்றவாளிகள் நிறைய பெற புடிக்க முடியல ..இப்போ இது ரொம்ப முக்கியம்


S.L.Narasimman
நவ 10, 2024 07:56

அதேமாதிரி இப்ப இருக்குற மந்திரி தம்பி தலைமறைவா இருக்கிற ஆளை எப்போ பிடிக்க போகிறீர்கள்.


அப்பாவி
நவ 10, 2024 07:06

தூக்கி 20 வருஷம் உள்ளே போடுங்க. மாட்டீங்க.


சமீபத்திய செய்தி