| ADDED : பிப் 11, 2024 12:52 AM
மதுரை: மதுரை மேலக்கால் மெயின் ரோடு கீழமாத்துார்ஸ்ரீ அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளியில் 6 வது ஆண்டு விளையாட்டு போட்டி நடந்தது.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டிக்கு இணையான சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம் துவக்க விழா நடந்தது. அரபிந்தோ மீரா கல்வி குழுமங்களின் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் அபிலாஷ், பொருளாளர் நிக்கி புளோரா, முதல்வர் ஞானசுந்தரி பங்கேற்றனர்.அபிலாஷ் கூறியதாவது:மைதானத்தில் சிந்தடிக்ஓடுதளம், கால்பந்து, கூடைப்பந்து விளையாட்டு அரங்குகள் இடம்பெற்றுள்ளன. ஸ்குவாஷ் விளையாட்டுக்கு ஏ.சி., அரங்கு உள்ளது. விமான நிலையத்தில் உள்ளதுபோல் 100 அடி உயரத்தில் தேசியக் கொடி பறக்கும் வகையில் கம்பம் அமைத்துள்ளோம். இது மாணவர்களுக்கு உந்துதலை ஏற்படுத்தும்.ஏற்கனவே 'ஆரா ஸ்போர்ட்ஸ் அகாடமி' உள்ளது. அதில் வில்வித்தை, குதிரையேற்றம், மலையேற்றம், கிரிக்கெட், கூடைப்பந்து, ஸ்கேட்டிங்கிற்கு தனித்தனி மைதானம் அமைத்துள்ளோம். நீச்சல்குளம் உள்ளது.எங்கள் குழும பள்ளிகளை சேர்ந்த 540 மாணவர்கள் தேசிய, மாநில விளையாட்டு போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளனர் என்றார். இன்று (பிப்.,11) அரபிந்தோ மீரா மெட்ரிக் பள்ளி, பிப்.,17ல் அரோபனா இந்தியன் (ஐ.சி.எஸ்.இ.,) பள்ளி விளையாட்டு விழா அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளியில் நடைபெறும்.