மன்னர் கல்லுாரிக்கு விருது
திருப்பரங்குன்றம் : மதுரை துாய்மை விழிகள் அறக்கட்டளை, அறம் செய் நண்பர்கள், மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி மாற்றுத்திறனாளிகள் லெகசி கிளப் சார்பில் தீபாவளி கொண்டாட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை வழங்கல், சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி கவுரவ தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில தலைவர் சாமிதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். துாய்மை விழிகள் அறக்கட்டளை தெய்வம் வரவேற்றார். இதன் நிறுவனர் வேல்முருகன், அறம் செய் நண்பர்கள் குருராஜன் பேசினர். மன்னர் கல்லுாரிக்கு மாற்றுத்திறனாளிகளின் மறுமலர்ச்சி விருதை, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விமலா ஆகியோர் கல்லுாரி முதல்வர் ராமசுப்பையாவிடம் வழங்கினர். மற்றொரு விருது வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, தியாக தீப விருதுகள் பாண்டியராஜா, கலாவதி, ஜெய் ஆண்டிராஜ், டாக்டர் மீனாட்சிக்கு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கினர். மணிகண்டன் நன்றி கூறினார்.