விழிப்புணர்வு முகாம்
மதுரை: கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திருப்பரங்குன்றம் சூரக்குளத்தில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது. மண்டல இணை இயக்குநர் ராம்குமார், உதவி இயக்குநர் பழனிவேல் தலைமை வகித்தனர். உதவி டாக்டர்கள் பார்த்திபன், ஷியாம் சுந்தர், ஆய்வாளர் சரோஜினி, பராமரிப்பு உதவியாளர் முருகேசன் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட மூன்று கன்றுகள், மூன்று முன்னோடி விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. தாது உப்புக்கலவை பை இலவசமாக வழங்கப்பட்டது. கூத்தியார்குண்டு கால்நடை மருந்தகம் ஏற்பாடுகளை செய்தது.