உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  விழிப்புணர்வு விழா

 விழிப்புணர்வு விழா

மதுரை: மதுரை எம்.எல்.டபுள்யூ.ஏ., மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை, கிரீன் டிரஸ்ட் சார்பில் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளிச் செயலாளர் நாகசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் முத்துசெல்வம் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் பேசினார். தேசிய பசுமைப் படை மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பங்கேற்றவர்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ