குற்றம் தடுக்க விழிப்புணர்வு
அலங்காநல்லுார்; அலங்காநல்லுார் அருகே பூதக்குடி ஊராட்சி அலுவலகத்தில் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான விழிப்புணர்வு, குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் காவலன் ஆப் குறித்தும், இன வேறுபாடு கமிட்டி அமைத்து பெண்கள் மற்றும் ஆண்களுக்கு மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பொம்மையாசாமி, போலீசார் சியாமளாதேவி, விஜயா தேவி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.