மதுரையில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
மதுரை: காஷ்மீரின் பஹல்காமில்நடந்த பயங்கரவாதத் தாக்குதலை கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலகம் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேசிய பொதுக்குழு உறுப்பினர்மகாலட்சுமி, மாநில ஐ.டி.. பிரிவு துணைபொதுச் செயலாளர் விஷ்ணுபிரசாத், விவசாய பிரிவு துணைத்தலைவர் சசிராமன், மீனவரணி தலைவர் சிவபிரபாகர், முன்னாள் நகர் தலைவர் மகாசுசீந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், செயலாளர் கண்ணன், மண்டல தலைவர்கள் பாண்டியராஜன், சீதாலட்சுமி, மணி உட்பட பலர் பங்கேற்றனர். திருமங்கலம்
மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் திருமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், நகர் தலைவர் சசிகுமார், பொதுச்செயலாளர் பாரதிராஜா, துணைத் தலைவர்கள் தங்கப்பாண்டி, வெற்றிச்செல்வி, சரவணகுமார், செயலாளர்கள் தமிழ்மணி, ராக்கப்பன், சின்னச்சாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.