உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரைகுறை பணியால் ஓடையில் அடைப்பு

அரைகுறை பணியால் ஓடையில் அடைப்பு

வாடிப்பட்டி, : வாடிப்பட்டி அருகே சித்தாலங்குடி-தோடனேரி கண்மாய் பாசன ஓடையில் அகற்றப்படாத தட்டை, கோரை புல், மர கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு கரை உடையும் அபாயம் உள்ளது.இங்குள்ள சித்தாலங்குடி கண்மாய் வைகை பெரியாறு பாசனம் மற்றும் தொடர் மழையால் கடந்த சில நாட்களாக மறுகால் பாய்கிறது. இந்த நீர் ஓடை வழியாக தோடனேரி கண்மாய்க்கு செல்லும். சில வாரங்களுக்கு முன் சித்தாலங்குடி ஊராட்சி 100 நாள் வேலை பணியாளர்கள் ஒன்றரை கி.மீ., துார தோடனேரி ஓடை மற்றும் கரைகளில் குறிப்பிட்ட துாரமிருந்த மரம், தட்டை, கோரை புற்கள் கழிவுகளை பெயரளவில் அரைகுறையாக வெட்டி ஓடை நடுவே ஆங்காங்கே குவித்துள்ளனர்.இதனால் முழுமையாக நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.விவசாயி செல்வம்: ஓடையை முழுமையாக சுத்தம் செய்யாமல் வேறு பணிக்கு சென்றுவிட்டனர். வளைந்து, நெளிந்து செல்லும் இந்த ஓடையில் கழிவுகள் தேங்கி அடைக்கிறது. தண்ணீரின் அளவு கூடினால் வயல்களுக்குள் தண்ணீர் செல்ல, கரை உடையும் அபாயம் உள்ளது. 2005ல் ஓடை உடைந்து விவசாயம் பாதித்தது. ஓடையின் வளைவு பகுதியில் பட்டியல் கருங்கற்களை வைத்து சொந்த செலவில் வலுப்படுத்தினேன். தற்போது தேங்கியுள்ள கழிவுகளால் விவசாயம் பாதிக்கும் நிலை உள்ளதால் கழிவுகளை அகற்ற நீர்வளத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ