ரத்ததான முகாம்
மதுரை: மதுரை ரயில்வே மருத்துவமனையில் எஸ்.ஆர்.எம்.யூ., ஓடும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. உதவி கோட்டச் செயலாளர் ராம்குமார் ரத்த தானம் செய்து துவக்கி வைத்தார். ஓடும் தொழிலாளர் சங்கத் தலைவர் ரவிசங்கர், செயலாளர் அழகுராஜா உள்ளிட்டோர் ரத்ததானம் செய்தனர். கோட்ட செயலாளர் ரபீக், ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, இயந்திரவியல் பொறியாளர்கள் மஞ்சுநாத் யாதவ், அமல் செபஸ்டியான் வாழ்த்தி பேசினர். செயலாளர் சீதாராமன் ஏற்பாடு செய்தார்.