உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  வேட்டை வெடியில் சிக்கி சிதறிய காட்டுப்பன்றி உடல் கிணற்றில் வீச்சு

 வேட்டை வெடியில் சிக்கி சிதறிய காட்டுப்பன்றி உடல் கிணற்றில் வீச்சு

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே செமினிப்பட்டி சிறுமலை அடிவாரத்தில் வன விலங்குகளை வேட்டையாட வைக்கபப்படும் நாட்டு வெடிகளில் கால்நடைகள் சிக்கி பலியாவது தொடர்கிறது. சோழவந்தான் வனச்சரகத்திற்குட்பட்ட குட்லாடம்பட்டி சிறுமலை பகுதி, விராலிப்பட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளை கண்காணிக்க வன பாதுகாவலர், காப்பாளர் என அதிகாரிகள் உள்ளனர். வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் மூலம் அமைக்கப்பட்ட வனக்குழுக்கள் ஐந்து ஆண்டுகளாக செயல் படவில்லை. முன்பு இக்குழுக்கள் மூலம் வேட்டை கட்டுப்படுத்தபட்டதுடன். கைது நடவடிக்கையும் நடந்தது. செமினிப்பட்டி மலையடிவார தரிசு நிலத்தில் டிச.26 மேய்ந்த நிறைமாத சினை பசு காட்டுப்பன்றிக்காக வைத்த வெடியில் சிக்கி வாய் சிதறி இறந்தது. நேற்று முன்தினம் அதேபகுதியில் வாய் வெடித்து சிதறிய நிலையில் 40கிலோ காட்டுப்பன்றியின் உடல் கிடந்தது. தகவல் அறிந்து வனத்துறையினர் வந்து பார்த்து சென்றனர். தற்போது காட்டுப்பன்றியின் உடல் அப்பகுதி விவசாய கிணற்றில் மிதக்கிறது. வேட்டையில் ஈடுபடுபவர்கள் மீது வனத்துறையினர்,போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை