மேலும் செய்திகள்
தென் மாவட்டங்களில் உதயநிதி சுற்றுப்பயணம்
27-Aug-2025
மதுரை:''பழனிசாமியின் எழுச்சி பயணத்தின் பயத்தால் 'பில்டிங் ஸ்ட்ராங்,பேஸ்மட்டம் வீக்' என்பது போல நடுக்கத்துடன் உதயநிதி பேசியுள்ளார். பழனிசாமி பற்றி நையாண்டி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களாலும் இதற்கு அதற்கு மேல் பேச முடியும்'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் எச்சரித்துள்ளார். மதுரையில் மேலும் அவர் கூறியதாவது: அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பற்றி தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி கிண்டலாக பேசியுள்ளார். பழனிசாமியை குறைத்து மதிப்பீட்டவர்கள் எல்லாம் காலத்தாலே தோல்வி அடைந்திருக்கிறார்கள். அவர் தி.மு.க.,வுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார். அந்த பயத்தை வெளிகாட்டும் வகையில் பழனிசாமி பற்றி பயத்துடன் வார்த்தையை உதயநிதி வெளியிட்டு வருகிறார். அவர் யோசித்துப் பேச வேண்டும். கட்சித் தலைவர்கள் குறித்து நையாண்டி பேசுவது அழகு அல்ல. ஸ்டாலின் மகன் என்ற ஒற்றை தகுதித் தவிர வேறு என்ன உள்ளது. சிறைக்கு சென்றீர்களா, போராட்டம் செய்தீர்களா. உங்களைக் காட்டிலும் எங்களுக்கு நையாண்டியாக, அருவருப்பாக பேச முடியும். உங்கள் நையாண்டி பேச்சுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு கூறினார்.
27-Aug-2025