மேலுார்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளலுாரில் பா.ஜ., ராணுவத்தினர் பிரிவு முன்னாள் மாநில செயலாளர் அனந்த ஜெயம் மாட்டுவண்டி பந்தயம் நடத்தினார். பெரிய மாடு பந்தயத்தில் 12 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் நல்லாங்குடி முத்தையா, அவனியாபுரம் மோகன் குமாரசாமி, கம்பம் ரஹீம், கோட்டநத்தாம்பட்டி ரவி மாடுகள் முதல் 4 பரிசுகளை வென்றன. சின்ன மாடுகள் பிரிவில் 29 ஜோடிகள் கலந்து கொண்டதால் போட்டி 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. மேலுார் என்.எம்.கே., நண்பர்கள் குழு, மட்டங்கிபட்டி காவியா முதல் பரிசு, உறங்கான்பட்டி மோகன கிருஷ்ணன், புதுக்கோட்டை குமார் 2 ம் பரிசு, மதகுபட்டி செல்வமணி, அனுமந்தம்பட்டி இளங்கோ 3 ம் பரிசு, வெள்ள நாயக்கன்பட்டி அழகர் பாண்டி, மலம்பட்டி காயத்திரி 4 ம் பரிசை வென்றனர். தனியாமங்கலம் கிராமத்தார்கள், இளைஞர்கள் சார்பில் நடந்த பெரிய மாடு பந்தயத்தில் 12 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் புலிமலைப்பட்டி முனிசாமி, விராமதி அடைக்கலம், கோட்ட நத்தாம்பட்டி ரவி, காரைக்குடி சிவா முதல் 4 பரிசுகளை வென்றன. சிறிய மாடு பந்தயத்தில் 48 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. புதுசுக்காம்பட்டி அதிபன், தேவாரம் விஜய் முதல் பரிசு, மாம்பட்டி செல்வந்திரன், கரூர் ரஞ்சித் 2ம் பரிசு, தனியா மங்கலம் சுந்தராசு, ராமநாதபுரம் சிவசாமி 3ம் பரிசு, சாத்தமங்கலம் அருண், நரசிங்கம்பட்டி ராக்காயி ஆனந்த் 4ம் பரிசை வென்றனர்.