உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தென்னையை தாக்கும் ஈ கட்டுப்படுத்த முகாம்

தென்னையை தாக்கும் ஈ கட்டுப்படுத்த முகாம்

அலங்காநல்லுார்,: அலங்காநல்லுார் வட்டர தோட்டக்கலை துறை சார்பில் தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்து ஆதனுாரில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.மதுரை வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை வல்லுநர் சுரேஷ் ஒருங்கிணைந்த வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த 'என்கார்சியா' என்ற ஒட்டுண்ணி குளவிகள் உள்ள ஓலைகளை ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது இணைத்து கட்டுப்படுத்தலாம். 'கிரைசோ பிட்' அல்லது 'அப்பர் டோக்கிரைசா அஸ்டர்' என்ற இரை விழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது இணைத்து கட்டுப்படுத்துவது குறித்து பேசினார். துறை பேராசிரியர் சந்திரமணி செயல் முறையில் விளக்கினார். உதவி இயக்குனர் ரிஜுவானா பர்வீன், அலுவலர்கள் பிச்சைமணி, ஜெயக்குமார், மற்றும் வாடிப்பட்டி செமினிபட்டியில் நடந்த முகாமிற்கு வட்டார உதவி இயக்குனர் தாமரைச்செல்வி, அலுவலர்கள் முத்துக்குமரன், சிவக்குமார், வினோத் கண்ணன, அப்துல் ஹாரிஸ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ