உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரோடு அமைக்கக்கோரி வழக்கு

ரோடு அமைக்கக்கோரி வழக்கு

மதுரை: பாலமேடு அருகே சேந்தமங்கலம் செந்தில். உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: புது நத்தம் ரோடு கடவூர் முதல் வெள்ளையம்பட்டி வரை தார் ரோடு அமைக்கக்கோரி கலெக்டர், மாவட்ட வன அலுவலருக்கு 2022ல் மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: சட்டப்பூர்வ அதிகாரமுடைய அதிகாரிகளிடம் இதுபோல் மனு அளித்தால் நிலுவையில் வைத்திருப்பதற்கு பதிலாக, தகுதி அடிப்படையில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டிய கடமை உள்ளது. பரிசீலிக்காதது கடமை தவறிய செயலாகும். மனுதாரருக்கு வாய்ப்பளித்து, மனுவை பரிசீலித்து அதிகாரிகள் இயன்றவரை விரைவில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி