உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விடுதி பணியிடங்களை  நிரப்ப வழக்கு 

விடுதி பணியிடங்களை  நிரப்ப வழக்கு 

மதுரை : மதுரை வழக்கறிஞர் செல்வகுமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லுாரி மாணவர் விடுதிகளில் துாய்மை பணியாளர்கள், இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொடர்ந்து பணியாற்றும் விடுதி காப்பாளர்களை அதே துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர் பணிக்கு மாறுதல் செய்ய வேண்டும். பணியாளர் நடத்தை விதிகளுக்கு புறம்பாக வேறுதொழில் செய்யும் காப்பாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு தற்போதைய நிலை குறித்து கலெக்டர் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை