உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம்; மாடு வளர்ப்போர் வலியுறுத்தல்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம்; மாடு வளர்ப்போர் வலியுறுத்தல்

அவனியாபுரம் : ''தை முதல்நாள் அன்று அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'' என மாடு வளர்ப்போர் , மாடுபிடி வீரர்கள் கோரியுள்ளனர்.அவனியாபுரம் சுற்றிலும் உள்ள பகுதிகளில் 300க்கும் அதிகமானோர் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கின்றனர். 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உள்ளனர்.காளைகள் வளர்க்கும் மாரி, திருப்பதி, மாடுபிடிவீரர் ராஜ்குமார் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தோருக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் டோக்கன் வழங்கப்படுகிறது. இதில் நிறைய குறைபாடுகள் உள்ளது. கடந்தாண்டு 24 உள்ளூர் காளைகளுக்கு மட்டுமே டோக்கன் கிடைத்தது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது முறையான பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை.இந்தாண்டு உள்ளூர் காளைகள் கூடுதலாக பங்கேற்கும் வகையில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து முன்னுரிமை அளிக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை