உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத்  நீட்டிப்பு

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத்  நீட்டிப்பு

மதுரை : சென்னை -- நாகர்கோவில் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்த வந்தே பாரத் சிறப்பு ரயில் மார்ச் 28 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.சென்னை- - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து பிப்ரவரி 1 முதல் மார்ச் 28 வரை வியாழக்கிழமைகளில் அதிகாலை 5:15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு இரவு 11:45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலியில் நின்று செல்லும். சென்னை செல்லும் ரயில் மதுரையிலிருந்து மாலை 5:55 மணிக்கு புறப்படுகிறது. சென்னையிலிருந்து வரும் ரயில் மதுரைக்கு காலை 10:56 மணிக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை