உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதல்வருக்கு மதுரையில் வரவேற்பு

முதல்வருக்கு மதுரையில் வரவேற்பு

மதுரை: துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று (அக்.,29) நடக்கும் நிகழ்ச்சிகள், நாளை (அக்.30) மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை, தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக்கும் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாக்களில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு விமானத்தில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு, மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் வரவேற்றனர். கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், தென்மண்டல ஐ.ஜி., பிரேம்குமார் சின்ஹா உட்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான தி.மு.க.,வினரும் திரண்டு நின்று முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். பின் அவர் காரில் திருநெல் வேலி சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை