உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாநகராட்சி முதல் பெண் கமிஷனராக சித்ரா பொறுப்பேற்பு: குப்பை முதல் குடிநீர் வரை கொட்டிக்கிடக்கும் பிரச்னைகள் ஏராளம்

மதுரை மாநகராட்சி முதல் பெண் கமிஷனராக சித்ரா பொறுப்பேற்பு: குப்பை முதல் குடிநீர் வரை கொட்டிக்கிடக்கும் பிரச்னைகள் ஏராளம்

மாநகராட்சியின் முதல் பெண் கமிஷனர் என்ற பெருமை பெற்ற இவர் முன் பல பிரச்னைகள் இருந்தாலும், அரசியல் ரீதியாக அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், தி.மு.க., நிர்வாகிகளை சமாளித்து செல்லுவதில் முந்தைய கமிஷனர் தினேஷ்குமார் போல் சமாளிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2021 முதல் 'அரசியல் அழுத்தத்தால்' 4 கமிஷனர்களின் மாற்றங்களை சந்தித்துள்ளது, மாநகராட்சி.தற்போது மக்கள் முன் மோசமான ரோடுகள்தான் முக்கிய பிரச்னையாக உள்ளது. புதிய ரோடுகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான டெண்டர் விடும் பணி நடக்கிறது. இதில் தகுதியான ஒப்பந்ததாரர்களுக்கு வாய்ப்பளித்தால் தான் தரமான ரோடுகள் கிடைக்கும். இதில் கவனம்செலுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கமிஷனரின் கவனத்திற்கு...

மாநகராட்சியில் பொறியியல் பிரிவின் செயல்பாடு மிக முக்கியமானது. அதில் பல பிரச்னைகள் உள்ளன.குறிப்பாக தேர்ச்சி திறன் 2 நிலை அலுவலர்கள் பல பிரிவுகளில் உதவி பொறியாளர் அந்தஸ்தில்பொறுப்பில் உள்ளனர்.இதனால் அதிகாரிகளுக்குள் 'ஈகோ' யுத்தம் நிலவுகிறது. பற்றாக்குறை என்ற பெயரில் ஏராளமான வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ. பல லட்சம் இழப்பு ஏற்படுகிறது. மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 900 டன் குப்பை சேர்கிறது. இதை உரிய நேரத்தில் அகற்ற கண்காணிப்பு மிக முக்கியம். குப்பை அள்ளும் பல வாகனங்களுக்கு தகுதி சான்று (எப்.சி.,) இல்லை என புகார் உள்ளது. நகரில் உள்ள 16 பிரதான கால்வாய்கள் குப்பை தேங்கும் மையமாக மாறிவருகிறது. மழை நீர் செல்லும் கால்வாய்கள் தொடர் இணைப்பு பல இடங்களில், ஆக்கிரமிப்புகளால் சிதைக்கப்பட்டுள்ளது. இதனால் மழை நீர் தேங்கும் பிரச்னை ஏற்படுகிறது.இதுதவிர, நகரில் பல ஆயிரம் வணிக கட்டடங்கள், குடியிருப்புகள்வகையாக மாற்றம் செய்யப்பட்டு குறைந்த வரி வசூலிக்கப்படுவதாகபுகார் எழுந்தது. இதுகுறித்து கமிஷனர் தினேஷ்குமார் விசாரணையை துரிதப்படுத்திய நிலையில் அவர் மாற்றப்பட்டார். இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு குழாய் பதிக்கும்பணியால் பல இடங்களில் ரோடுகள் தோண்டப்பட்டு சரிப்படுத்தப்படவில்லை. முக்கிய ரோடுகள், ரவுண்டானா, பஸ்ஸ்டாண்டுகள்என பல இடங்களில் தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. கழிவுநீரை உள்வாங்கும் 70 பம்பிங் ஸ்டேஷன்களில் பெரும்பாலும் மாற்று மோட்டார்கள் இல்லை. 35 மையங்களில் ஜெனரேட்டர்கள் இல்லை. நகரில் நாய் தொல்லைகள், ஆபத்தை ஏற்படுத்தும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் போன்ற மக்களின் ஏராள எதிர்பார்ப்புகள் புதிய கமிஷனரிடம் ஏற்பட்டுள்ளது.கமிஷனர் சித்ரா நேற்று மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு பொறுப்பேற்றார். சில நிமிடங்களில் அவர் துறை சார்ந்த அமைச்சர் நேரு திருநெல்வேலி செல்லும் தகவல் தெரிந்து, ரிங்ரோடு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
பிப் 04, 2025 10:45

சீக்கிரமே மாற்றலுக்கு ரெடியாயிடுங்க தாயி. திருட்டு திராவிடனுங்க மதுரை உருப்பட உடமாட்டாங்க.


c.k.sundar rao
பிப் 04, 2025 10:20

IAS, IPS and bureaucrats of govts in the country, either be at states are central govts are slaves to there political masters and will not do any worthwhile work for uplift of oppressed and suppressed class of people.


முக்கிய வீடியோ