சிட்டி ஸ்போர்ட்ஸ
மதுரை : சமயநல்லுார் குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஆடவர், மகளிர் கபடி போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தன. தனபால் மேல்நிலைப் பள்ளி ஏற்பாடுகளை செய்தது.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் போட்டியை துவக்கி வைத்தார். தனபால் பள்ளி தலைமையாசிரியர் தினேஷ் சேவியர், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்பாபு கலந்து கொண்டனர்.ஆடவர் போட்டி முடிவுகள்: 14 வயது பிரிவில் சமயநல்லுார் அரசுப் பள்ளி முதலிடம், சமயநல்லுார் செயின்ட் ஜோசப் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 17 வயது பிரிவில் செயின்ட் ஜோசப் பள்ளி முதலிடம், சத்தியமூர்த்தி நகர் அரசுப் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 19 வயது பிரிவில் சமயநல்லுார் அரசுப் பள்ளி முதலிடம், குலமங்கலம் அரசுப் பள்ளி இரண்டாமிடம் பெற்றன.மகளிர் பிரிவு: 14 வயது பிரிவில் சிறுவாலை அரசுப் பள்ளி முதலிடம், கூடல்நகர் செயின்ட் ஆன்டனி பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 17 வயது பிரிவில் செயின்ட் ஆன்டனி பள்ளி முதலிடம், திரு.வி.க. பள்ளி இரண்டாமிடம் பெற்றன.19 வயது பிரிவில் செயின்ட் ஆன்டனி பள்ளி முதலிடம், சமயநல்லுார் அரசுப் பள்ளி இரண்டாமிடம் பெற்றன.