உள்ளூர் செய்திகள்

நிறைவு விழா

மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 20 நாட்களுக்கான தேனீ வளர்ப்பு பயிற்சி நிறைவு விழா நடந்தது. நிலையத்தலைவர் சுரேஷ் வரவேற்றார். மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் பேசுகையில் ‘‘மாணவர்கள் கற்றுக்கொண்ட தொழில்நுட்பங்களை உபயோகித்து சிறந்த தொழில் முனைவோராக மாற வேண்டும்’’ என்றார். தொழில்நுட்ப வல்லுநர்கள் அருளரசு, சுப்பிரமணியன், செல்வராணி, ஜோதிலட்சுமி, சரவணன் கலந்து கொண்டனர். தேனீ வளர்ப்பு குறித்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பயிரின பெருக்கத்துறை இணைப் பேராசிரியர் ஆனந்த் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி